மக்கள் போராட்ட முன்னணியின் சின்னம் வெளியீடு 

மக்கள் போராட்ட முன்னணியின் சின்னம் வெளியீடு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குடை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

நேற்று(07.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இந்த விடயத்தினை தெரிவித்தார். 

முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே களமிறங்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மக்கள் போராட்ட முன்னணி குடை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply