யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள்மீது தாக்குதல் மேற்கொண்டு தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்கள யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள்கள், நான்கு பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.