வட மாகாணத்திலுள்ள 3,000 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை நிலவுவதால் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று (29/11) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மஹிந்தானந்த இவ்வாறு தெரிவித்தார்.