ரணிலுக்கு மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 

ரணிலுக்கு மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அறிவித்துள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஹட்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிபில நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பமாகும் என தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply