சஜித்துடன் கைகோர்த்த பிரபா கணேசன்

சஜித்துடன் கைகோர்த்த பிரபா கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுடன் பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

இதற்கான நிகழ்வு கொழும்பில் நேற்று (13.08) நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட 03 கட்சிகள், பதிவு செய்யப்படாத கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 27 அமைப்புகளின் தலைவர்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அவ்வாறே அமுல்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்களுக்கு 10 பச்சர்ஸ் காணியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்ததாக பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் வாழும் தமிழர்களுக்கான வீட்டு உரிமை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply