
ஜனாதிபதி தேர்தலில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று(14.08) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடும் நாளை(15.08) காலை 9 மணிக்கு முதல் முற்பகல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தேர்தல் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.