கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல்வேறு பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய நாளை (01/12) இரவு 10 மணி முதல் மறுநாள் (02/12) அதிகாலை 5 மணி வரையிலான 8 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி மொரகஸ்முல்ல, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல – கொஸ்வத்தை, நாவல முதல் நாவல திறந்த பலக்லைக்கலைக்கழகம் வரையிலான பகுதி மற்றும் அதனை அண்மித்த ஏனைய குறுக்கு வீதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கீழ் நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்த பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
