அம்பாறையில் பெருமளவிலான போதை பொருட்களுடன் இருவர் கைது

கல்முனையில் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் உல்லாச விடுதி ஒன்றில் நேற்று (16.08) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதை பொருட்களின் பெறுமதி 30 லட்சம் ரூபாவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 36 மற்றும் 49 வயதுடையவர்களென்றும் கொழும்பிலிருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்களை கடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தற்போது கைதான சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் மீட்கப்பட்ட பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் இதுவாகும்.

Social Share

Leave a Reply