
தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம் செய்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராக நேற்று(21.08) நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் அவர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.