
ஜனாதிபதித் தேர்தலின் போது டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தொலைத்தொடர்பு நிபுணர்களின் தேசிய முன்னணி இன்று (22.08) காலை தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டது.
இதேவேளை, தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்குஅரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி தவறானது என சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று (21.08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை டெலிகொம் நிறுவன பொறியியலாளர்கள் சங்கத்தின் குழுவொன்று திலித் ஜயவீர உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியது.
இதன்போது, டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க தலையிடுமாறு கோரி
கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.