ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த விடயம் இதுவரை உத்தியோகபூர்வமா அறிவிக்கப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின், கட்சி கூட்டமொன்றமொன்றில் ஸ்ரீரங்கா கலந்து கொண்டதாக மேலும் தகவல் வெளிவந்த நிலையில் அதனை உறுதி செய்யும் புகைப்படமும் வெளிவந்துள்ளது.
ஸ்ரீரங்கா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சியின் தமிழ் உறுப்பினர்கள் சிலரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி தமிழ் கட்சிகளும் அதிருப்தியடைந்துளளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
