‘விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது’

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் திரிபான ஒமிக்ரொன் வைரஸ் தொடர்பாக இன்று (30/11) பாராளுமன்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன புதிய வைரஸ் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, இந்த கடுமையான வைரஸின் அறிகுறிகள் நாட்டிற்குள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

‘விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது'

Social Share

Leave a Reply