மரணித்த வேட்பாளருக்குப் பதிலாக புதிய வேட்பாளரைக் களமிறக்க சந்தர்ப்பம்

மரணித்த வேட்பாளருக்குப் பதிலாக புதிய வேட்பாளரைக் களமிறக்க சந்தர்ப்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் உயிரிழந்த ஹைதுருஸ் மொஹமட் இலியாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை முன்னிறுத்த இயலும் எனத் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹைதுருஸ் மொஹமட் இலியாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம், அவர் சார்பில் வேட்பு மனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரைப் பரிந்துரைக்க முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளதுடன், இதற்காக 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாக்குச் சீட்டில் மொஹமட் இலியாஸின் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் ஏதும் இடம்பெற மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த புத்தளத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹைதுருஸ் மொஹமட் இலியாஸ், மாரடைப்பால் தனது 79வது நேற்று முன்தினம்(22.08) காலமானார்.

Social Share

Leave a Reply