காணொளி: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவு – எம்.பி வேலுகுமார்

காணொளி: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவு - எம்.பி வேலுகுமார்

பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம். உதயகுமார் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(27.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினுடாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பளம் சாத்தியமாகி இருப்பதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி அந்த கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம். உதயகுமார் ஆகியோர்  ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply