கடவுச்சீட்டு விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும்(29.08) மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்களை மாத்திரம் விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.