பாடசாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தவுடன் நன்கொடைகளை வழங்குமாறு பாடசாலை நிர்வாகங்கள் கோருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அதன் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், “பெரும்பாலான பாடசாலைகள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்து கொள்வதற்கு ஏதேனும் ஒரு நன்கொடையை வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாடசாலை நிர்வாகம் நன்கொடை பெறக்கூடாது என தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில்,
பெற்றோரை நன்கொடை செய்ய வற்புறுத்துவது முற்றிலும் தவறானது.
கல்வி அமைச்சிடம் இது குறித்து வினவியபோது, நன்கொடைகளை வழங்குவதில் அழுத்தம் உள்ள பெற்றோர்கள் அமைச்சுக்கு விரைவில் அறிவிக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது என்றும்
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது” என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் மீண்டும் மாணவர்களிடம் வசதிகள் மற்றும் சேவைக் கட்டணம் அறவிடப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (01/12) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
