பாய்ஸ் பட நடிகருக்கு கை கொடுக்கும் அறிமுக இயக்குநர்

பாய்ஸ் பட நடிகருக்கு கை கொடுக்கும் அறிமுக இயக்குநர்

நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கர் தானே தயாரித்து இயக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

இதன் பரீட்சார்த்த படப்பிடிப்பு அண்மையில் முடிவுற்ற நிலையில், இப்படப்பிடிப்பில் இசையமைப்பாளர் தமன் கலந்து கொண்டுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கவுள்ளார்.

2003ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய தமன் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார்.
 
இவர் கடந்த வருடம் வெளியாகிய தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்ததிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரசித்தி பெற்றார்.

இடையிடையே தமன் சிந்தனை செய், ஐயனார், மிஸ்டர் மஞ்சு போன்ற திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளித்திருந்தார்.

பாய்ஸ் திரைப்படம் வெளியாகி 21 வருடம் ஆகின்ற நிலையில் மீண்டும் தமனை இத்திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Social Share

Leave a Reply