தமிழ் நடிகருக்கு அமெரிக்காவில் கிடைத்த விருது

தமிழ் நடிகருக்கு அமெரிக்காவில் கிடைத்த விருது

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகரான விஜய் விஷ்வா (அபிசரவணன்) ‘அட்டக்கத்தி’ ‘குட்டிபுலி’ உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து டூரிங் டோல்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், மாயாண்டி, கொம்பு வச்ச சிங்கம், சாயம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்

இவரின் சேவையால் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவின் தமிழ் சங்கத்தால் அங்கு அழைக்கப்பட்ட இவர், சுதந்திர தினத்தன்று ‘கிராண்ட் மார்ஷல்’ கவுரவமும், சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் பெற்றார்.

இதுமட்டுமின்றி ‘இளம் பாரி’ விருதும் பெற்று தமிழ் சினிமா துறைக்கு நடிகர் விஜய் விஷ்வா அவர்கள் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply