தேர்தலுக்காக மாத்திரம் கருத்துக்களை முன்வைக்கும் ரணில் – சரித ஹேரத்

தேர்தலுக்காக மாத்திரம் கருத்துக்களை முன்வைக்கும் ரணில் - சரித ஹேரத்

தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, வெற்றி பெறுவதற்கும் மாத்திரம் ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(02.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்,

“ரணில் விக்ரமசிங்க தற்பொழுது அரச சேவைகள் தொடர்பில் முன்வைக்கின்ற கருத்துக்கள், தேர்தலுக்காகக் கூறும் கருத்துக்களாகும். இரண்டு வருடங்களாக அரச சேவையிலிருந்த ரணில் விக்ரமசிங்கவினால், துறைமுக நகரத்தின் சிறிய அளவிலான காணியைக் கூட முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியவில்லை.

ஆகவே, அவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்காக மாத்திரமே சம்பளத்தை அதிகரிப்பது போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்.

தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்களுக்கு, ஒவ்வொரு வீடுகளுக்கும் யானைக் குட்டியொன்றை வழங்குவதாகக் கூற முடியும். இருப்பினும், யானை குட்டிகளை வழங்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற இயலாது” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply