இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று (30/11) இந்தியாவுக்கு உத்தியோக விஜயம் மேற்கொண்டார்.
இது 2 நாள் விஜயமாக அமைவதுடன் அங்குள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களையும் அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
இது பஸில் ராஜபக்ஷ பதவியேற்று மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
