தமிழ் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான மோகன் நடராஜனின் இறுதிச்சடங்கு இன்று (04.09) நடைபெறுகிறது
உடல்நலக்குறைவு காரணமாக தனது 71வது வயதில் அவர் நேற்று (03.09) காலமானார்.
இவர் 1986ஆம் ஆண்டு மோகன், நதியா நடிப்பில் வெளிவந்த ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
பின்னர் பிரபு நடித்த ‘என் தங்கச்சி படிச்சவ’, சத்யராஜ் நடித்த ‘வேலை கிடைச்சிடுச்சி’, அருண்பாண்டியன் நடித்த ‘கோட்டை வாசல்’, விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித் நடித்த ‘ஆழ்வார்’, சூர்யா நடித்த ‘வேல்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
இவர் 2011ஆம் ஆண்டு விக்ரம் நடித்து வெளிவந்த ‘தெய்வத் திருமகள்’ படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இதுவே அவர் தயாரித்த கடைசி படமாகும்.