இனிமேல் தன்னை “தல” என அழைக்க வேண்டாம் என்று இந்திய தமிழ் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமாரின் செயலாளரான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் தன்னை பற்றி எழுதும்போது அஜித்குமார் என குறிப்பிட்டால் போதும் எனவும், “தல” என்றோ, வேறு ஏதேனும் பட்டப் பெயர்களை கொண்டோ அழைக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தல” என்று என்னை அழைக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்வதாகவும் அஜித்குமார் என்றோ, அஜித் என்றோ, அல்லது ஏ.கே என்றோ அழைத்தால் போதுமானது என்றும் அனைவரின் ஆரோக்கியம், மன அமைதி, மன நிறைவு கிடைக்க வாழ்த்துவதாகவும் நடிகர் அஜித்குமார் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
