நியூசிலாந்து அணியில் இலங்கையின் ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியில் இலங்கையின் ரங்கன ஹேரத்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சிவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ரங்கன ஹேரத், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கும், 2 போட்டிகள் கொண்ட இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளரான விக்ரம் ரதோரும், நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் ரதோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு மாத்திரம் பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, நொய்டாவில் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் காலியில் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Social Share

Leave a Reply