அனுர யாழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

அனுர யாழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாண மக்களை
அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அனுரகுமார யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமையை விமர்சிக்கின்றனர்.
அவர்கள் அவ்வாறு கூற இயலாது. ஒருவரின் தனிப்பட்ட விருப்புக்கமைய வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஆகவே ஜே.வி.பியின் அச்சுறுத்தும் செயற்பாடுகளை கண்டிப்பதுடன்
எதிர்ப்பையும் வெளியிடுகிறோம்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்திரமே,தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது தொடர்பில் ஒன்றும் குறிப்பிடவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply