
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆறாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீமெந்துக்கான செஸ் வரி ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாயம் பூசப்படாத ஒரு கிலோ கிராம் வெள்ளை சிமெண்டிற்கான செஸ் வரி ஐந்து ரூபாவிலிருந்து நான்கு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 கிலோ கிராம் மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி எட்டு ரூபாவிலிருந்து ஏழு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.