தேசிய மக்கள் சக்தி மட்டுமே கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் – அனுர

தேசிய மக்கள் சக்தி மட்டுமே கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் - அனுர

கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியென அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மோசமான அரசியல் சூதாட்டம் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசியலில் இதுவரை என்ன நடந்தது? தேர்தல் வரும்போது அங்கும் இங்கும் கட்சித் தாவுகிறார்கள். இது போன்ற வெட்கக்கேடான அரசியல் வேறெங்கும் இல்லை.

சஜித்தின் மேடையிலும், ரணிலின் மேடையிலும் என்ன நடக்கிறது என்று பாருங்கள். கொள்கை ரீதியாக இருப்பது தேசிய மக்கள் சக்தி மட்டுமே, யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை
புரிந்துக் கொண்டு தேர்ந்தெடுங்கள். செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என அனுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

Social Share

Leave a Reply