
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரச்சாரக்குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவாளர்கள் இல்லை என்பதால் பிரச்சாரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஏனைய கட்சிகளிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தவர்கள் தற்போது தங்கள் முடிவை நினைத்து வருந்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் விரைவில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வார்கள் என்றும் தயாசிறி நம்பிக்கை வெளியிட்டார்.