இலங்கை எதிர் நியூசிலாந்து: இலங்கையின் முதல் இன்னிங்ஸ் நிறைவு 

இலங்கை எதிர் நியூசிலாந்து: இலங்கையின் முதல் இன்னிங்ஸ் நிறைவு 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இலங்கையின் முதலாம் இன்னிங்ஸிற்கான துடுப்பாட்டம் நிறைவடைந்துள்ளது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (19.09) காலை ஆரம்பமாகியது. 

3 விக்கெட்டுக்கள் மீதமிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் இழந்து, முதல் இன்னிங்ஸிற்காக 305 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

நேற்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது களத்திலிருந்த பிரபாத் ஜயசூரிய ஓட்டங்கள் இன்றியும், ரமேஷ் மென்டிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த அசித்த பெர்னாண்டோவும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓர்ர்கே 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

போட்டியின் முதலாம் நாள் விபரம், 

காலி சர்வதேச மைதானத்தில் நேற்று(18.09) ஆரம்பமாகிய போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பத்தும் நிசங்க அதிரடியாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போதும் 25 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். மறுபுறம், தினேஷ் சந்திமல் 30 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, களத்தில் இணைந்த கமிந்து மென்டிஸ், குசல் மென்டிஸ் ஜோடி 103 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்று அணிக்கு வலு சேர்த்தது. குசல் மென்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

7வது டெஸ்ட் சதத்தைக் கடந்த கமிந்து மென்டிஸ், இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைய இரு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இனுடாக 4 டெஸ்ட் சதங்களை விரைவாகக் கடந்த இலங்கை வீரராக கமிந்து மென்டிஸ் பதிவானர்.

போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை 7 விக்கெட் விழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் வில்லியம் ஓர்ர்கே 3 விக்கெட்டுக்களையும், க்ளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் பெற்றுள்ளனர்.

இலங்கை XI: திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மென்டிஸ், தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்),  குசல் மென்டிஸ், ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ

நியூசிலாந்து XI: டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி(அணித் தலைவர்), அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

Social Share

Leave a Reply