ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை

ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை

“வாக்கு என்பது பலமானதொரு ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை அனைத்து வாக்காளர்களும் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

பிற்பகல்வரை காத்திருக்காமல் காலைவேளையிலேயே தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் சுப்பையா ஆனந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் ,

“மாறுபட்டதொரு அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் இது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நமது நாட்டில் குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறு நீதியாகவும், நியாயகமாகவும் தேர்தல் நடைபெறுவது வரவேற்கக்கூடிய விடயமாகும்.

இதற்காக பாடுபட்ட தேர்தல் ஆணைக்குழு, பொலிஸார், படையினர் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அத்தனை அரச ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு அத்தனை பொதுமக்களும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளையும், நாட்டில் உள்ள சட்டத்திட்டங்களையும் முறையாக பின்பற்றுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என்றபோதிலும் காலைவேளையிலேயே வாக்களித்துவிடுமாறு வேண்டுகின்றேன்.

நான் வாக்களித்து என்ன நடக்கப்போகின்றது என சிந்திக்கவேண்டாம், உங்கள் வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்துங்கள்.

இது நாட்டில் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாகும். எனவே, நாட்டு பிரஜை என்ற வகையில் இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் முறையாக பின்பற்றுங்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் விதிமுறை மீறல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

Social Share

Leave a Reply