
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தான் ஆதரவு வழங்குவதாக எடுத்த தீர்மானம் தொடர்பில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த போது, நாட்டை மீட்டெடுப்பதற்குத் தேவையான கடினமான தீர்மானங்களை மேற்கொண்டதினை சுட்டிக்காட்டியுள்ள ஹரின் பெர்னாண்டோ, தோல்வியை எதிர்கொண்டாலும் தனது தெரிவுகள் குறித்து எவ்வித வருத்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியடைந்துள்ள போதும், வாக்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பாரிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.