
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும், தேசியப் பட்டியலினூடகாவும் பாராளுமன்றத்திற்கு நுழைய மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில், ரணில் விக்ரமசிங்க கட்சியின் ஆலோசகராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு இணைந்து பணியாற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.