வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் இலங்கை குழாமில் சேர்ப்பு

வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் இலங்கை குழாமில் சேர்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில், இலங்கை குழாமிற்குச் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இளம் வீரரான நிஷான் பீரிஸ் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசையில் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், நிஷான் பீரிஸ் இலங்கை டெஸ்ட் அணிக்காகச் சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுக் கொள்வார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது இறுதியுமான போட்டி காலியில் நாளை மறுதினம்(26.09) ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.

Social Share

Leave a Reply