நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மென்டிஸிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். நிஷான் பீரிஸ் இலங்கை அணிக்காகப் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
மேலும், வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு பதிலாக மிலன் ரத்நாயக்க அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது இறுதியுமான போட்டி காலியில் நாளை (26.09) ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.
இலங்கை அணி: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ