இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின், இரண்டாவதுபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
காலி சர்வதேச மைதானத்தில் இன்று(26.09) இந்த போட்டி ஆரம்பமாகியது.
இந்த போட்டிக்கான இலங்கை அணி நேற்று(25.09) அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மென்டிஸிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். நிஷான் பீரிஸ் இலங்கை அணிக்காகப் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
மேலும், வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு பதிலாக மிலன் ரத்நாயக்க அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.
இலங்கை XI: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ
நியூசிலாந்து XI: டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி(அணித் தலைவர்), அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே