
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது ன.
இதற்கமைய ஒகஸ்ட் மாதத்தில் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒகஸ்ட்டில் 0.8% ஆக பதிவான உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -0.3% ஆகக் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, ஒகஸ்ட் 0.4% ஆக இருந்த உணவு அல்லா பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -0.5% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.