ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் மட்டுமே தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்றாகும் என அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மஹரகம தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி செயற்பாட்டாளர்களுடன்நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் பணி இருப்பதாக கூறிய அவர்
நாடு தற்போது பன்முக பல சவால்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிறுவர் தினம் முதியோர் தினம் குறித்து பேசும் போது கூட இலட்சக்க கணக்கான பிள்ளைகள் பட்டினியால் வாடுகின்றனர்.
அவர்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்களும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன.
நாட்டிற்கு தீர்வுகளை வழங்கும் பொறுப்பு வெற்றி பெற்ற அணியினருக்கும் போலவே தோற்கடிக்கப்பட்ட அணியிருக்கும் காணப்படுகின்றன.
இந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தயாராக வேண்டும்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் குழுவாக அவர்கள் மாற வேண்டும்..
வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான நாட்டுக்கு ஏற்புடையதல்ல.
இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சி முன்னோடியான
வேலைத்திட்டத்தை கொண்டிருக்கிறது. அதிலிருந்து பின்வாங்க முடியாது. இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது.
பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த வெற்றி பொது வெற்றியாக அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்குத் தேவையான
உற்பத்தித் தொழில்களை உருவாக்க வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்க முடியாது என்று கூறப்படுகிறது.
இத்தகைய கடினமான சூழ்நிலையில், பழமைவாத முறைகளுக்குச் செல்லாமல், புதிய வழிமுறைகளை
கண்டறியும் திட்டத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.
விமர்சனங்களோடு மட்டும் மட்டுப்பட்டுவிடக் கூடாது. தகவல் தொழில்நுட்பக் கல்வியை நடைமுறையில் யதார்த்தமான ஒன்றாக மாற்ற வேண்டும்.
ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க வேண்டும். சிறுவர் சிறுமியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வியில் மாற்றுத்
தெரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்” எனறார்.