குழுவினரால் தாக்கப்பட்டதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு

குழுவினரால் தாக்கப்பட்டதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு

மாத்தளை, மஹவெல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுவன் குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று நேற்று(02.10) பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலர் இரும்பு கம்பிகள் மற்றும் ஹெல்மட்களை பயன்படுத்திக் குறித்த சிறுவனைத் தாக்கியதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குவதற்குப் பயன்படுத்திய பொருட்களுடன் மாத்தளை, மஹவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மஹாவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply