இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய 2026ம் ஆண்டிற்கான டி20 உலக கிண்ணம் வரையில் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய கடமையாற்றிய இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி முதல், 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை சனத் ஜயசூரிய இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.