எம்பிலிப்பிட்டிய – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
மாதம்பே பகுதியில் இன்று(10.10) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்து தொடர்பில் வெளியாகிய புகைப்படங்களில் பேருந்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
தீ விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பேருந்து முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.