நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தேவையான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக மலரும் மலையகம் என்ற சுயேட்சை குழுவின் தலைவர் வி. தனரூபன் தெரிவித்துள்ளார்.
காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் இந்த குழு வேட்பு மனுவையும் நேற்று (11.10) சமர்ப்பித்தது.
பாரம்பரிய அரசியலுக்கு அப்பாற்பட்டு புதிய தூரநோக்கு சிந்தனையுடன் தனது அரசியல் பயணம் அமையும் என்றும், மலையக அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நடைமுறை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் முழுமையாக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.