மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய மாணவி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் நேற்று (14.10) மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
சிறுவர் மற்றும் இளைஞர் பரம்பரையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி இந்த மாணவி மகஜரை கையளித்துள்ளார்.