அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் நேற்று (15.10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை அறிவித்தார்.
அத்துடன் இது ஒரு தற்காலிகமான தீர்மானம் என்றும், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.