காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் மை அடையாளம் இடப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப் பெருவிரலில் மை அடையாளமிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரலில் மை அடையாளமிடப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.