2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30.10) ஆரம்பமானது.
தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இன்று(30.10) தமது அலுவலக நேரத்தில் வாக்களிக்க முடியும்.
மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் மற்றும் 4ம் திகதிகளில் தபால் மூல வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 07ம் மற்றும் 08ம் திகதிகள் வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.