பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 200 மில்லியனை விட அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 41 வயதான ஓமல்பகே தம்மிக்க சமன் குமார மற்றும் 53 வயதான கங்கணம் ஆராச்சிகே சுஜீவ ஆகியோர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பிலியந்தலையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது, சந்தேக நபர்களிடம் 7.415 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 1.017 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மேலும், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.