வட மேல் மாகாண ஆளுநர் காலமானார்

வட மேல் மாகாணத்துக்கான ஆளுநர் ராஜ கொளூரே இன்று காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமாகியுள்ளார். டிசம்பர் 03 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


வழக்கறிஞரான இவர், இலங்கை கொமியுனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். தற்போதும் அந்த கட்சியின் உறுப்பினர். 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வட மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

வட மேல் மாகாண ஆளுநர் காலமானார்

Social Share

Leave a Reply