
பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று (08.11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சகல பிரசார நடவடிக்கைகளும்
நாளை மறுதினம் நள்ளிரவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் அமைதியாக இருக்கும் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டதுடன் அமைதியான காலத்தில் மேன்முறையீடு செய்யக்கூடாது” என்றும் அறிவுறுத்தினார்.