இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை ஒன்றுக்கொன்று என சமன் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது நாளை (11.13) முதல் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இத்தொடருக்கான இலங்கை குழாமில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்க இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீசும்போது அவரது இடது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை காயம் காரணமாகவே இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு திரும்பிய அவர் உயர் செயல்திறன் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் ஹசரங்க விற்கு பதிலாக இலங்கை குழாமில் சகலதுறை வீரரான துஷன் ஹேமந்த இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.