பட்டத்தை துறந்த கமல்ஹாசன்

பட்டத்தை துறந்த கமல்ஹாசன்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகர் என பன்முக திறமைகொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா துறைக்கு பல நவீன தொழிநுட்பங்களை அறிமுகம் படுத்தியதில் பெருமைக்குரியவர்.

1960ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.பீம்சிங் இன் இயக்கத்தில் வெளியாகிய “களத்தூர் கண்ணம்மா” எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகினார்.

1974ஆம் ஆண்டு வெளியாகிய “கன்னியாகுமரி” எனும் மலையாள படமே இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும், இத்திரைப்படதிற்காக முதல் ‘பிலிம்பேர்’ விருது பெற்றார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்திய கமல், 2000ஆம் ஆண்டு அவர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய ‘தெனாலி’ திரைப்படத்தின் மூலம் “உலகநாயகன்” எனும் பட்டம் கமலுக்கு வழங்கப்பட்டது.

தனது திறமைக்கு ஏற்ப ரசிகர்களால் உலகநாயகன் எனும் அடைமொழியை கொண்டு அழைக்கப்பட்டு வந்த கமல், ‘உலகநாயகன்’ அல்லது வேறு எந்த அடைமொழி கொண்டும் அழைக்க வேண்டாம் எனவும், தன்னை கமல்ஹாசன், கமல் அல்லது KH என அழைக்குமாறும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பே நடிகர் அஜித் தன்னை “தல” அல்லது வேறு எந்த அடைமொழி கொண்டும் அழைக்க வேண்டாம் எனவும், அஜித் அல்லது AK என்று தன்னை அழைக்குமாறு தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.

அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன்அவர்களும் தன்னை எந்த அடைமொழி கொண்டும் அழைக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

Social Share

Leave a Reply