புதிய நடைமுறை – அமைச்சரவை அனுமதி

இலங்கையில் அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைய எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும்போது இந்த புதிய நடைமுறையிலான அடையாள இலக்கம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடையாள இலக்கத்தை கொண்டு தேசிய அடையாள அட்டையை தயாரிக்கவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து செயற்பாடுகளின்போதும் மற்றும் பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கு இம்முறைமை வசதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய நடைமுறை - அமைச்சரவை அனுமதி

Social Share

Leave a Reply